நீதிபதி பி.ஹெச்.லோயா ((B.H. Loya)) மரண வழக்கில் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஷொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில், பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.ஹெச்.லோயா, நாக்பூரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மரமணடைந்தார். பின்னர் இந்த வழக்கை விசாரித்த வேறு ஒரு நீதிபதி, வழக்கிலிருந்து அமித்ஷாவை விடுவித்து உத்தரவிட்டார். […]