தமிழகத்தின் பல பகுதிகளிலும் யானைகள் ரயிலில் மோதி உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாகவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், கோவை பாலக்காடு ரயில்வே சாலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணியன், இளந்திரையன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய மூன்று நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
போராட்டம் என்ற பெயரில் கிட்டத்தட்ட ஓராண்டாக நெடுஞ்சாலைகளை எப்படி முடக்க முடியும்? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் 300 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் இதற்கு முறையான தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த மோனிகா […]
ரஞ்சன் கோகாயைப் போன்ற வெட்கமற்ற நீதிபதியை நான் பார்த்ததில்லை என்று ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடுமையாக விமர்சித்து உள்ளார். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமைய நீதிபதியாக பதிவி வகித்து அண்மையில் ஓய்வுப்பெற்ற நிலையில் ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார் . தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.இதை அடுத்து அவரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து […]
குவிந்த ஊழல் ,திறமையின்மை புகார் காரணமாக 3 நீதிபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர் நீதிபதிகள் கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் ஊழல் புகார்கள் மற்றும் திறமையின்மை குறித்து தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் 3 நீதிபதிகள் நீக்கம் நடைபெற்று உள்ளது.மேலும் கூட்டத்தில் நீக்கம் செய்யப்பட்ட 3 நீதிபதிகளுக்கு தலா 5 முறை கிடைக்கும் ஊதிய உயர்வையும் உடன் ரத்து செய்து உத்தரவு பிறபிக்கபட்ட நிலையில் அவர்களை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கவும் […]