ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் பிராந்திய மொழியில் எழுதப்பட வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு. குஜராத்தில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டத்துறை அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மிகவும் பழைமையான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் […]
பசுவின் கன்றை கொன்றதால் தனது மகனையே தேர்க்காலில் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி நமது தமிழகம் என்பதில் பெருமை என ஆளுநர் தமிழிசை பேச்சு. புதுச்சேரியின் காரைக்கால் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக நீதித் துறை குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற கட்டடத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் தமிழிசை, ஏழை எளியோருக்கு மருத்துவம் கிடைப்பது […]
இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்களுக்கு சட்டப் புத்தகம் வழங்கும் விழா,சென்னை உயர்நீமன்றதில் உள்ள பார் கவுன்சிலில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து,விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி:”வழக்கறிஞர்களின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்.திமுக ஆட்சிக்கு வருகிறபோது எல்லாம் நாங்கள் மறப்பது இல்லை.ஏனெனில்,நங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது உறுதுணையாக இருந்தவர்கள் வழக்கறிஞர்கள்தான்”,என்றும் மாநில […]