இன்று தமிழகம் மற்றும் கர்நாடகாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே செங்கல்பட்டை மையமாக கொண்டு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இன்று காலை சரியாக 7.39 மணி அளவில் பூமிக்கடியில் 10கிமீ தொலைவில் இந்த நில அதிர்வு உருவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவானது. அதே போல, கர்நாடக மாநிலம் விஜயபுரத்திலும் இதே போல நில அதிர்வு உணரப்பட்டது. அங்கு நில அதிர்வானது 3.1 என பதிவாகியுள்ளது. காலை 6.52 மணிக்கு […]
சென்னைக்கு வடக்கே 100 கி.மீ தொலைவில் திருப்பதி அருகே 3.6 ரிக்டர் அளவிலான இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல். சென்னைக்கு வடக்கே 100 கி.மீ தொலைவில் திருப்பதி அருகே 3.6 ரிக்டர் அளவிலான இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும்,ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு வடகிழக்கில் 85 கிமீ தொலைவில் நள்ளிரவு 1.10 க்கு இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. An earthquake of magnitude 3.6 occurred […]
திண்டுக்கல் அருகே உள்ள கே.கீரனூர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தயம் அருகே கே.கீரனூர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறிய நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேறி சாலையில் மக்கள் தஞ்சம் அடைந்தனர்.
ஆய்வு மேற்கொள்ளும் போதே சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தகவல். நில அதிர்வு தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டும் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். நில அதிர்வால் பாதிக்கபட்ட வீடுகளில் இருந்தவர்களை முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும் என்றும் ஆய்வு மேற்கொள்ளும் போதே சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் எனவும் கூறினார். இதனிடையே, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டுவில் […]
வேலூர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டுவில் இன்று காலை 9.30 மணி அளவில் அடுத்தடுத்து 2 முறை லேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தகவல் தெரிவிக்கின்றன. சுமார் 3 வினாடிகள் நில அதிர்வு நீடித்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. ஏற்கனவே பேரணாம்பட்டு சுற்று வட்டாரத்தில் கடந்த நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 23ல் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், மீண்டும் […]
வேலூர்:இன்று அதிகாலை வேலூர் அருகே நில அதிர்வு உணரப்பட்டதாக தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு தகவல். வேலூரில் இருந்து மேற்கு-தென்மேற்கு திசையில் 59 கிமீ தொலைவில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.17 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.நில அதிர்வால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.