கடந்த டிச 1-ஆம் தேதி ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி, ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். ஆளுநர் முதலமைச்சரிடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது. முதலமைச்சருடன் ஆளுநர் அமர்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டால் வரவேற்போம். பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பது சரியாக இருக்கும். […]