தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் மண்ணிற்குள் புதைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் இருக்கும் கிராமம் தான் லியாங்ஷூய்குன். இந்த கிராமத்தில் இன்று காலை 6 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்தது. இந்த நிலச்சரிவில் புதைந்த வீடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட வீடுகளை […]
இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் காயமடைந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் இன்று(ஜூலை 19) காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் காயமடைந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. காங்ரா மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையத்தின்படி, காலை 9 மணியளவில் ஒரு மாவு மில்லுக்கு அருகிலுள்ள கட்டுமான தளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது,இதில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் சுதேஷ் மோக்தா தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இமய மலைப்பகுதிகளில் பருவக்காற்று தொடங்கியதுடன் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில் நேபாளத்தில் உள்ள பார்பட் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சில பேர் சிக்கி உள்ளனர். இதனை தொடர்ந்து மீட்கும் பணியில் உள்ள மீட்புப்படையினர், இதுவரை அப்பகுதியில் 6 உடல்களை மீட்டுள்ளனர். மேலும், இரண்டு பேர் காணாமல் போய் உள்ளனர் என்று இது குறித்து […]
உத்ரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், ஜும்மா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் சேற்றில் புதைந்து தரைமட்டமாகியது. இதுவரை இந்த நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று […]
உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள தாமஸ் பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 200-க்கும் மேற்பட்டோர் மாநில பேரிடர் மீட்பு படை குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டம் ரைனி கிராமம் அருகே உள்ள தாமஸ் எனும் பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ள நிலையில், இதுகுறித்து தகவலறிந்து மாநில மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது நிலச்சரிவில் சிக்கி இருந்த 200 பேரை மாநில பேரிடர் […]
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவிலிருந்து பேருந்து ஒன்று அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது. நேற்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள வடகிழக்கு பகுதியான நைனிடாலிலிருந்து பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. அப்போது 14 பயணிகளுடன் சென்ற அந்த பேருந்து மலைப்பாங்கான பகுதி வழியாக சென்றுள்ளது. சற்றும் எதிர்பாராத விதமாக அங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பாறைகள் உருண்டோடியது. இந்த சம்பவத்தை தொலைவிலேயே கண்ட ஓட்டுநர் பேருந்தை நிலச்சரிவிற்கு தொலைவில் நிறுத்தியுள்ளார். இருந்தபோதிலும் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவை பார்த்து பயந்த பயணிகள் அனைவரும் […]
வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மியான்மர் எல்லையில் உள்ள காக்ஸ் பஜார், ரங்கமாதி மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.இந்த தொடர் மழையின் காரணமாக இஸ்லாம்பூர், புரிகாட், அம்டோலி, ஹத்திமாரா, போரோகுல்பாரா, சாரைபாரா பகுதிகளில் பெருத்த நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன. இந்த மழையாலும், நிலச்சரிவாலும் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்து உள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் […]