தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு ஆறரை நாட்களுக்குதான் உள்ளது என்றும்,இனி வரும் காலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லாத அளவிற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறுகையில்: “தனியார் கொள்முதல் இல்லாமல் சொந்தமாக 6,220 மெகாவாட் மின் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.நிலக்கரி கையிருப்பு ஆறரை நாட்களுக்கு உள்ளது. எனினும்,137 டாலருக்கு 4 லட்சத்து 80 […]
நேற்று மாலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு 50 ஆயிரத்து 760 மெட்ரிக் டன் நிலக்கரி வந்ததையடுத்து மின் உற்பத்தி சீரானது. கடந்த சில தினங்களுக்கு முன்பதாக தூத்துக்குடியில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு 50 ஆயிரத்து 760 மெட்ரிக் டன் நிலக்கரி வந்தது. இதையடுத்து தற்போது அங்கு தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி சீரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம். தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி தருகிறது என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், பிரதமருக்கு முதல்வர் […]
தூத்துக்குடி:அனல்மின் நிலையத்துக்கு 4000 டன் நிலக்கரி வந்துள்ளது. தூத்தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்தமுள்ள 5 யூனிட்டுகளில் ஒரு யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.இதனால்,மின் வெட்டு ஏற்படும் நிலை ஏற்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில்,தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு 4000 டன் நிலக்கரி வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து,மின் உற்பத்தி செய்யப்படும் யூனிட்டுகளின் எண்ணிக்கை இரண்டு யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. அதன்படி,1,4 யூனிட்டுகளில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது,மீதமுள்ள 2,3,5 ஆகிய யூனிட்டுகளில் தொடர்ந்து […]
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களை ஆந்திரப்பிரதேச அரசு ரத்து செய்துள்ளது. மாநிலத்தின் மின் உற்பத்திக்கான நிலக்கரியை இறக்குமதி செய்ய இரண்டு டெண்டர்களுக்கு ஆந்திர அரசு அறிவிப்பு விடுத்திருந்தது. ஏலத்தில் அதானி நிறுவனம்: இதனைத் தொடர்ந்து,இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி வியாபாரியான அதானி நிறுவனம் மட்டுமே 5 லட்சம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் பங்கேற்றது. அதைப்போல 7 லட்சத்து 50 ஆயிரம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் பங்கேற்ற அகர்வால் நிறுவனம் அதானி நிறுவனத்தை விட அதிக […]
புவி வெப்பமயமாதலின் தீய விளைவுகளை தடுக்க ஊர்தோறும் மின் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், உலகைக் காக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றும்,மரபுசாரா மின்உற்பத்திக்கு சிறப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி, மத்திய அரசு,உள்ளாட்சிகளுடன் இணைந்து செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும்,இது […]
மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பில் உள்ளதால் மின்தடை ஏற்படாது என்று மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் உறுதியளித்துள்ளார். உலகளவில் நிலக்கரியின் விலை உயர்ந்துள்ளதன் விளைவாக நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால்,இந்தியாவில் டெல்லி மட்டுமின்றி, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் மின் நெருக்கடி குறித்து கவலை தெரிவித்து வருகின்றன.இதற்கிடையில், மின்நெருக்கடி குறித்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார்.அதில்,மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தேசிய தலைநகரில் மின் நெருக்கடி […]
நிலக்கரி பற்றாகுறையால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டு, அனைத்துப் பொருட்களின் விலையும் உச்சத்தை தொடக்கூடிய நிலைமை ஏற்படும் என்று ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் அனல் மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வருவது கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்னைப் பூமி: “அரும்பொருட்களை தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு, அவற்றின் வளத்தை அயராத உழைப்பாளர்களுக்கு அள்ளித் […]