நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பாமர மக்கள் மட்டுமல்லாது உலக தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டானுக்கு அறிகுறி லேசாக இருப்பதாகவும் இதனால் அவர் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜசிந்தா ஆர்டெர்ன் தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நியூசிலாந்தில் ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனையடுத்து, நாடு முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜசிந்தா ஆர்டெர்ன் தனது திருமணத்தை […]