பீகாரில் புதிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேற்று அமைந்த நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில தலைமை செயலகத்தில் காலை 11:30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா மற்றும் பிற அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடுகள் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. பீகார் அமைச்சரவையில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில், இந்திய அரசியல் களத்தில் பல்வேறு பரபரப்பான மாற்றங்கள் நடந்து வருகிறது. அந்தவகையில், இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா உடனான கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் பாரதிய ஜனதாவுடன் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமான ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் 9வது முறையாக முதலமைச்சராக நேற்று பதவியேற்றார். அவருக்கு […]
பீகார் : பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் நேற்று 9வது முறையாக பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வெற்றிக்கு பின்னர், […]
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் ( ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார் தற்போது தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் கொடுத்துள்ளார். இன்று காலை ஜேடியு எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார், ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆட்சியை கலைக்க கோரி ஆளுநரிடம் கூறியுள்ளேன். பலபேரிடம் இந்த ஆலோசனை கேட்ட பிறகே இந்த முடிவை […]
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம்( ஜேடியு) தலைவர் நிதிஷ் குமாரும் மீண்டும் கட்சி மாறுவது குறித்து பீகாரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதல்வர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடன் கூட்டணியை முறித்து கொண்டு இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு ஜேடியு எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார் சந்திப்பு நடத்தலாம் என்று இதைத் தொடர்ந்து அவர் ராஜ்பவனுக்குச் […]
ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான முதல்வர் நிதிஷ் குமார் தனது கூட்டணி கட்சியான லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்ஜேடியுடன் விலகி நாளை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவலால் பீகாரில் அரசியல் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது குறித்து (ஆர்ஜேடி) RJD மற்றும் ஜேடியு (JDU) ஆகிய இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த செய்தி இந்தியா கூட்டணியை […]
இந்தியா கூட்டணியில் உள்ள ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும், 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலையும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். அதன்படி, 2020-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக, நிதிஷ்குமாரின் ஜேடியூ இணைந்து போட்டியிட்டன. பீகாரில் […]
கடந்த அக்டோபர் 30, 2003 அன்று பிற்பகுதியில் ஜனதா தளம், லோக் சக்தி மற்றும் சமதா கட்சி ஆகியவற்றின் இணைப்புடன் ஐக்கிய ஜனதா தளம் உருவாக்கப்பட்டது. இதில் ஜனதா தளத்தின் அம்பு சின்னமும், சமதா கட்சியின் பச்சை வெள்ளை கொடியும் இணைந்து ஐக்கிய ஜனதா தளத்தின் தேர்தல் சின்னமாக மாறியது. கடந்த 2004 முதல் 2016 வரை ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவராக ஷரத் யாதவ் இருந்தார். அதேசமயம், நிதிஷ்குமார் 2016 முதல் 2020 வரை […]
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஓரணியில் நிற்க வேண்டும். – சோனியா காந்தி, நிதிஷ்குமார், லாலு பிரசாத் சந்திப்பு பின்னர் லாலு பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியது . வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆளும் பாஜகவை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்க உள்ளனர். இந்த மெகா கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி […]
பாஜக கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து 8வது முறையாக மீண்டும் முதல்வராகி உள்ளார் நிதிஷ் குமார். கடைசியாக நடந்து முடிந்த பிகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார் பாஜவுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பதவியேற்றார் . ஐக்கிய ஜனதா தளத்தை (43) விட பாஜக அதிக இடம் (74) வென்றுள்ளது என்றாலும், முதல்வராக நிதிஷ் குமார் தொடர்ந்தார். ஆனால், பாஜகவை சேர்ந்தவர்களுக்கே, நிதித்துறை, […]
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அங்கம் வகிக்கிறது. மேலும், பீகாரில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஜார்கண்ட் மாநில பிரிவு அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கொடி பிடித்துள்ளது. பீகாரை விட ஜார்காண்ட் அதிக கனிம வளங்களை கொண்டது. ஆனாலும், மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் வரும் 25-ம் […]