பொன்னாடை, பூங்கொத்து வேண்டாம்.. நிதியுதவி வேண்டும்.! டிடிவி கோரிக்கை.!

AMMK Leader TTV Dhinakaran

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) கட்சியின் தலைவருமான டிடிவி.தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு ஓர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில், தனது கட்சி வளர்ச்சிக்காக நிதி கொடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து டி.டி.வி.தினகரன் வெளியிட்ட செய்தி குறிப்பில், நீங்கள் (ஆதரவாளர்கள்) என் மீது கொண்டுள்ள அன்பும், நான் உங்கள் மீது கொண்டுள்ள அன்பும் அவ்வளவு அற்புதமானது. எனக்கு எப்போதும் எல்லாமும் ஆகிய கழக உடன்பிறப்புகளுக்கு அன்புகலந்த கண்டிப்பான … Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு: தொழிலதிபராக முன் வந்து நிதி வழங்கிய சூரி.!

soori

மிக்ஜாம்புயல் சென்னையைத் தாக்கி ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது, நகரம் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக நிதியுதவி அளித்து வருகின்றனர். முன்னதாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த லிஸ்டில் சமீபத்திய நடிகர் சூரி இணைந்துள்ளார். தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு (சிஎம்பிஆர்எஃப்) ரூ.10 … Read more

மாணவிகளுக்கு ₹1,000 வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்!

அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம், நாளை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 93 ஆயிரம் மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் பலன் பெற இருப்பதாக கூறப்படுகிறது. திட்டத்தின் துவக்க விழா, நாளை வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இத்திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் … Read more

கடலூர் வெடி விபத்து – முதல்வர் நிதியுதவி அறிவிப்பு…!

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வாண வெடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், வெடிகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள … Read more

பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துனருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசுப் பேருந்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த நடத்துனர் பெருமாள் குடும்பத்தினருக்கு ₹10 லட்சம் நிதி உதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்உத்தரவிட்டுள்ளார்.  சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி சென்ற விழுப்புரம் அரசு பேருந்தில் மேல்மருவத்தூர் அருகே பேருந்து நடத்துனர் மற்றும் அதில் பயணித்த பயணி ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறில் ஈடுபட்ட பயணி மது போதையில் இருந்த நிலையில் அவர் நடத்துனர் பெருமாளை தாக்கியுள்ளார். இதனால் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவர் மேல்மருவத்தூர் அரசு … Read more

#BREAKING : இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்குங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து … Read more

#BREAKING : தேர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – முதல்வர் நிதியுதவி அறிவிப்பு…!

தேர்விபத்தில் உயிரிழந்த இளைஞர் தீப ராஜன் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.  நாகை மாவட்டம் திருமருகல் அருகே, உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் தேரின் சக்கரத்திற்கு முட்டுக்கட்டை வைத்த போது, சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் தீபராஜன் என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், … Read more

அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5,000 நிதியுதவி – பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மழை வெள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு கோரிய ரூ.4,626 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது … Read more

#Breaking:உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி;மனைவிக்கு அரசுப்பணி- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை:இரவு நேர ரோந்து பணியின்போது பழமையான கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி,அவரது மனைவிக்கு அரசுப்பணி  வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரை கீழவெளி பகுதியில் உள்ள பழமையான கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்து தலைமைக் காவலர் சரவணன் என்பவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.படுகாயம் அடைந்த மற்றொரு தலைமைக் காவலர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விளக்குத்தூண் காவல்நிலைய காவலர்கள் இருவரும் … Read more

#Breaking:பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி – பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு!

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நிரந்தர முடக்கம் அடைந்த பெற்றோர்,விபத்தில் இறந்த தாய் அல்லது தந்தை உள்ளிட்ட பெற்றோரை இழந்த பள்ளி மாணவ,மாணவிகளின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும்,இந்த உதவித்தொகையப் பெற மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக,இத்திட்டத்தில் பயனடையும் மாணவ – மாணவியர் தற்போது வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றால், தற்போது … Read more