கர்நாடக முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்ட குமாரசாமி, சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைந்துள்ள விதான சவுதா வளாகத்தில், நேற்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. கர்நாடகாவின் முதலமைச்சராக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் HD குமாரசாமிக்கு, ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து துணை முதல் அமைச்சராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சிகள் […]