சென்னையில் நாளை அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நாளை காலை 10.35 மணிக்கு அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்க உள்ளது. அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆய்வு செய்தனர். அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி வேலுமணி, தங்கமணி ஆகியோர் […]
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, […]
சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு இடையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு மிதமான முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சேலம்,கள்ளக்குறிச்சி,திருச்சி,தஞ்சை,கடலூர்,நாமக்கல், ஈரோடு, தருமபுரி,அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும்(நவ.17,18) மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே,நாளை சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறியிருந்த நிலையில்,தற்போது அந்த தகவலை வானிலை ஆய்வு மையம் […]
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், கொரோனா பாதிப்புகள் குறித்தும் அதன் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்தும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பாரத பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பாரத பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. […]