ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகள் மட்டுமே அனுமதி என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலப்பின மாடுகளுக்கு டோக்கன் வழங்கமாட்டோம் எனவும் தெரிவித்தார். மேலும், நாட்டுமாடு இனங்களை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.