Tamil News Today Live : வரும் மக்களவை தேர்தல் குறித்து தொகுதி பங்கீடு வேளைகளில் திமுக கட்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் , மதிமுக உடன் தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் அமைச்சர் ராஜினாமா, ஆளும்கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் நகர்வுகளை ஆளும் காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது. இதுபோல பல்வேறு அரசியல் நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணாலாம் ….
மதுரையில் இன்று அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். ஆளுங்கட்சி மீதான விமர்சனங்களையும், மக்களவை தேர்தல் குறித்தும் குறிப்பிட்டு பேசினார். மதுரையில் திமுக – அதிமுக : மதுரையில் திமுக அரசு புதியதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்கள் மதுரையில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற அதிமுக ஆட்சி காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து பிரதான கட்சிகளும் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, தங்களது வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது. இந்த சூழலில் தான், நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கரும்பு விவசாயி சின்னம் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உட்பட அனைத்து மாநில கட்சிகளும் தேர்தலுக்கான பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறன்றனர். அதன்படி, கூட்டணி மற்றும் தொகுதி தொடர்பான பேச்சுவார்த்தை, தேர்தல் அறிவிக்க தயாரிப்பு, வேட்பளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பரப்புரை என அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்றும், நாளையும் டெல்லியில் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, டெல்லி பாரத் மண்டபத்தில் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் பாஜக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் சுமார் 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாகிய இந்தியா கூட்டணியில் தற்போது அடுத்தடுத்து பெரும் அடி விழுந்து வருகிறது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லை, அதிருப்தி, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேசிய கட்சிகள் உட்பட மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆயுதமாகி வருகிறது. தேசிய கட்சிகளுடன் இருக்கும் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பணிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக மற்றும் பாஜக என தனித்தனி கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இதில் குறிப்பாக, நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் திமுக தீவிரமாக […]
நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து ‘இன்றைய உரிமை முழுக்கமே நாளைய வெற்றி முழுக்கம்’ என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவை காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுகவுக்கு உள்ளது. திமுகவின் கொள்கை முழக்கம் பாசிச சக்திகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திமுக ஒரு மாநில கட்சி என்பதை போகுமிடமெல்லாம் பாஜகவினர் விமர்சனம் செய்கிறார்கள். அதாவது, திமுக என்பது மாநிலக் கட்சிதானே என்று எள்ளி நகையாட நினைத்தவர்கள், ஒவ்வொரு மாநிலத்திற்குச் செல்லும்போதும் திமுகவை விமர்சித்துப் […]
தலைவராக பணிகளை செய்யவே நேரம் சரியாக இருப்பதால் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய இணையமைச்சரும், முன்னாள் மாநில பாஜக தலைவருமான எல்.முருகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதன்பின் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவரப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த கூடாது என்றும், மக்கள் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக – திமுக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. ஏற்கனவே, தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டது. திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமையிலான […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில தொடங்கி வைத்தாா். இந்த யாத்திரையின் முதற்கட்டம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில், ’என் மண் என் மக்கள்’ நாளை சென்னையில் நிறைவு பெறுகிறது. […]
நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், வரும் 12-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இந்த […]
அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்க மத்திய அரசை அகற்றியே தீருவோம் என்று அண்ணா நினைவு நாளையொட்டி திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. அண்ணா நினைவு நாளில் அவரது நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி நடத்தி அஞ்சலி செலுத்த வேண்டும். எந்த நாட்டைச் சுற்றினாலும் தென்னாட்டுக் காந்தி என்று போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா நம்மோடுதான் இருப்பார். அண்ணா வழியில் அயராது […]
2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும் கூட்டணி குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு வழங்கியும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகிறது. அதன்படி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சமீபத்தில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி […]
ஆளும் மத்திய அமைச்சரவையின் பதவிககாலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனால் மக்களவை தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நிர்வாக காரணங்களுக்காக தேர்தல் ஆணையமும் ஆரம்பித்து தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி மீண்டும் பிரதமரானால் தேர்தலே இருக்காது… இதுவே கடைசி வாய்ப்பு – காங்கிரஸ் பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. […]
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி முக்கிய பொறுப்பில் இருப்பவருமான வானதி சீனிவாசன், இன்று தென் சென்னை பாஜக அலுவலக திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். அந்த விழா முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து வானதி சீனிவாசன் , நாடாளுமன்ற தேர்தல் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார். பாஜகவோடு ஒட்டுமில்லை.. உறவுமில்லை.! அதிமுக திட்டவட்டம்.! அவர் கூறுகையில், நாங்கள் பாஜவுக்காக நாடாளுமன்ற தேர்தலில் அனைவரிடமும் ஆதரவு கேட்போம். ஏன் தேவைப்பட்டால் ரஜினி, கமல், விஜய் […]
நாடாளுமன்றம் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தயராகி வருகின்றனர். அந்தவகையில், மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதி என பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதான அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை நடத்தி வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக என இருந்தாலும் பாஜகவும் தற்போது தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகிறது. […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். பாளைங்கோட்டையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருக்கக்கூடிய 10 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெளியிடப்பட்டுள்ளது. […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்றும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதனால், தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் உட்பட அனைத்து மாநில கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 96 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் ஒருபக்கம் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்குறுதி என தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், பாஜகவுக்கு எதிராக உருவாகியுள்ள இந்தியா கூட்டணியில் சீட் பகிர்வு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதன்படி, இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி […]