2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக ஒருநாள் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆளும் பாஜக அரசின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் கூடியுள்ளது.