நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில் வாகன சோதனையின் போலிசார் ஈடுபட்டபோது அந்த வழியே வந்த பிரபல ரவுடியான கலைவாணனை நிறுத்தி விசாரித்தனர். அவன் வைத்திருந்த 5 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை திருச்சியில் இருந்து வெடிகுண்டுகள் செயலிழப்பு சிறப்பு பிரிவு போலீசார் மணல் மூட்டைகளை அடுக்கி, பலத்த பாதுகாப்புடன் வெடிக்க வைத்து அழித்தனர்.இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.வெடித்த குண்டுகளில் இருந்து சிதறிய வெடிமருந்து, மற்றும் ஆணிகளை ஆய்வுக்காக போலீசார் […]