சென்னையில் 178 நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசல். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் சென்னையில் 178 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் இன்று பெட்ரோல் 1லிட்டர், ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.