நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக திமுக அரசு மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968 -ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது.அதன்படி, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 […]
நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக நாளை கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக […]
ஒரே மாநிலமாக இருந்த தமிழ்நாடு, கர்நாடக, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களை 1956ஆண்டு நவம்பர் 1ம் தேதி மொழிவாரியாக பிரிக்கப்பட்டன. இந்த நாளை மற்ற மாநிலங்கள் எல்லாம் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதேப்போல் நாமும் நவம்பர் 1 தேதியை “தமிழ் நாடு தினம்” ஆக கொண்டாட வேண்டும் என்று அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கையிட்டு வந்தனர். தற்போது இந்த கோரிக்கையை தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்று நவம்பர் 1ம் தேதியை ‘தமிழ் நாடு தினம்’ ஆக […]