பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரத்தில், ஜிஎஸ்டி வரி, நல்லபல மாற்றங்களை கொண்டுவந்திருப்பதாக, கூறியிருக்கிறார். டெல்லி அக்பர் சாலையில் அமைக்கப்பட உள்ள மத்திய வர்த்தக அமைச்சக கட்டிடமான வன்ஜியா பவனுக்கான அடிக்கல் நாட்டுதல் விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று அடிக்கல் நாட்டிய பிரதமர், பின்னர், நிகழ்ச்சியில் உரையாற்றினார். இன்றைய நாளில், தொழில்நுட்பம் வணிகம் செய்வதற்கான வழிகளை எளிதாக்கியுள்ளோடு, வரும் ஆண்டுகளில், இது மேலும் மேம்படும் என்றும் பிரதமர் கூறினார். கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி திட்டம், […]