நாம் அனைவரும் சமம் என உரக்க முழங்குவோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விளிம்புநிலை மக்களுக்காக நான் இருக்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்வீட். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் ஆவடி அருகே நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற முதலமைச்சர், மாணவிகளுடன் கலந்துரையாடினர். அப்போது, நரிக்குறவ மாணவி இல்லத்தில் முதலமைச்சர் இட்லி, வடை உள்ளிட்ட காலை சிற்றுண்டி அருந்தினார். மேலும் நரிக்குறவ மாணவிக்கு இட்லி ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். இந்த நிலையில், […]