நடிகர் மாணிக்க விநாயகத்தின் உடல் இன்று இறுதிச்சடங்கிற்கு பின்பு கோட்டூர்புரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை 6.45 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மாணிக்க விநாயகம் திருடா திருடி, சந்தோஷ் சுப்ரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரின் மறைவிற்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். […]