ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூல் செய்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்த நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர். நடிகர் ரஜினிகாந்த நடித்த ‘காலா’ திரைப்படம் பலத்த சர்ச்சைக்கிடையே வெளியானது. இந்தப்படம் வெளியிடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இவர் ஏற்கனவே கபாலி படத்தில் அதிக கட்டணம் வசூலித்ததை நீதிமன்றத்தில் வழக்காக தொடுத்து அதன் வரவு செலவுகளை […]