ஓட்டுனர்கள்,நடத்துனர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான பணி செய்வதால்,அவர்களுக்கு ரூ.50,00,000க்கு தனிநபர் காப்பீடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். சென்னையிலிருந்து விழுப்புரம் சென்ற பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்படி கூறிய நடத்துனர் பெருமாளை போதையில் வந்த பயணி அடித்ததில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னையிலிருந்து விழுப்புரம் சென்ற பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்படி கூறிய நடத்துனர் பெருமாளை போதையில் வந்த பயணி அடித்துக் கொலை செய்திருக்கிறார். கொல்லப்பட்ட நடத்துனரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், […]
பள்ளி,கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யும்போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி,கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும்,பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் பேருந்தில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பே பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும்,பள்ளி,கல்லூரிகள் மற்றும் அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்த […]
மீன் விற்பனை செய்யும் பெண்ணை பேருந்திலிருந்து இறக்கி விட்டதற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். தான் நடந்து சென்று […]