புதுக்கோட்டை:கீரனூர் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் முறைக்கேட்டில் ஈடுப்பட்டதாக எழுந்த புகாரில் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ.1.8 கோடி நகைக்கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுப்பட்டதாக கூறி வங்கி செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.