பொது நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய மண்டல, மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 40 கிராம் வகையிலான (அதாவது 5 சவரன்) நகைக்கடன் தள்ளுபடி விவரங்கள் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட நிலையில், அயல் மாவட்ட தண்ணிக்கையாளர்கள் மூலம் சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு தற்போது ஆணையிட்டுள்ளது. கடந்த 2021 மார்ச் 31-ஆம் தேதி வரை கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்டுள்ள 5 சவரன் வரை […]
5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியதாவது: “2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலின் போதும், 2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போதும், 5 பவுன் வரை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்து வாங்கிய […]
நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியுடையவர்கள் யார் என்பது தொடர்பான பட்டியலை தயாரிக்க துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகை கடன் உள்ளவர்களில் தகுதி உடையவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது. மேலும், அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான ஆய்வின் போது, போலி நகைகளை வைத்து, நகை கடன் பெற்றவர்கள் தொடர்பான விவரங்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நகை கடன் தள்ளுபடிக்கு […]
நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஏமாற்றும் திமுக அரசின் வஞ்சகச் செயல் கண்டனத்திற்குரியது. திமுக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதி அடிப்படையில், 5 சவரன் வரை நகைக்கடன் பெற்ற அனைவருக்கும், எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 35 இலட்சம் பேருக்கு நகைக்கடன் கூதள்ளுபடி செய்ய முடியாது என்ற தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் […]
குறைவான எண்ணிக்கையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக எதிர்கட்சிகள் கூறுவது உண்மைக்கு மாறானது என அமைச்சர் பெரியசாமி அவர்கள் பேட்டி. அமைச்சர் பெரியசாமி அவர்கள் நகைக்கடன் தள்ளுபடி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நகைக்கடன் பெற்றவர்களில் 50% பேர் இந்த தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர்; முழு விவரங்களை சரிபார்த்த பின்னரே 40 கிராமுக்கு கீழ் கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். நகையை அடகு வைக்காமல் பணம் பெற்ற மோசடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், வறுமைக்கோட்டுக்கு […]
நகைக்கடன் தள்ளுபடியில் 14.5 லட்சம் நகைக்கடன்கள் மட்டுமே ஏற்புடையது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு. கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு துறை மூலம் பெறப்பட்ட 35 லட்சம் நகைக்கடன்களில் 14.5 லட்சம் நகைக்கடன்கள் மட்டுமே ஏற்புடையது என்றும் நகைக்கடன் பெற்றவர்கள் ஜனவரி 3 முதல் நகைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கும் சில தினங்களுக்கு முன்பு பேசிய அமைச்சர், மாநிலம் […]
5 சவரன் நகைகளை திரும்ப கொடுக்க பட்டியல் தயார் நிலையில் உள்ளது என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு. கடந்த சட்டமன்றத் தேர்தலில்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இது தொடர்பான அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது விதி எண் 110இன் கீழ் முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார். […]
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி பற்றிய எந்த விவரமும் தமிழக அரசின் அரசாணையில் இல்லை என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பெருமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும்,நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பையும் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு திமுக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கடனிலே பிறந்து, கடனிலே […]
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட அனைத்து நகைக்கடன்களையும் ஆய்வு செய்யும் வகையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் அடகுவைக்கப்பட்ட 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கபட்டிருந்த நிலையில், இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில், முறைகேடுகள் நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட அனைத்து நகைக்கடன்களையும் ஆய்வு செய்யும் வகையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் மட்டுமன்றி, 100% […]
தகுதியானவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன் பெரும் வகையில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும்தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, இந்த நகை […]
உரிய ஏழை, எளியவர்களுக்கு 5 சவரன் வரை அடகு வைத்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நகை கடன் தள்ளுபடிக்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நகை கடனில் நிறைய தவறுகள் இருப்பதால், அதனை முழுவதுமாக ஆய்வு […]
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன் பெரும் வகையில் […]