கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. இதைதொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற 165 பேருக்கு நகையை திருப்பி வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, வரும் 31ம் தேதிக்குள் தமிழ்நாட்டிலுள்ள 14.40 லட்சம் பேருக்கு […]
திமுகவின் இரட்டைவேடத்திற்கு மற்றுமோர் சாட்சி நகைக்கடன் வாக்குறுதியும், தற்போதைய அறிவிப்பும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பொதுத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையிலே அல்லது திமுக தலைவர் தலைப்புச் செய்தியாக வாசித்தபோது எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்தல் […]
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வைத்தவர்களில் 10,18,066 பேருக்கு கடன் தள்ளுபடிக்கு தகுதியானவை 48 லட்சம் கடன்களில் 35 லட்சம் கடன் தள்ளுபடி இல்லை என நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வைத்தவர்களில் 10,18,066 பேருக்கு கடன் தள்ளுபடிக்கு தகுதியானவை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார். குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும். பின்னர் அவை சரிபார்த்து ஆய்வின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி […]
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6000 கோடி நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்றும் இதன் மூலமாக 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் கடந்த வாரம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில்,5 சவரனுக்கு உட்பட்டு ரூ.6000 கோடி நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,40 கிராமுக்கு […]
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் முறைக்கேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அவ்வாறு,தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,கடன் வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள்,முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,ஒரே ஆதார் எண்ணைப் பயன்படுத்தி,ஒரே நபர் பல […]
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மேற்பட்ட நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தர பிறப்பித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இதனால்,நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை கூட்டுறவுத்துறை கோரியது. இந்நிலையில்,கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மேற்பட்ட நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தர பிறப்பித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக அனைத்து கூட்டுறவு மண்டல மேலாண் இயக்குநர்களுக்கும், கூட்டுறவு […]