நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி தனித்து போட்டியிடுகிறது என தலைவர் ரவி பச்சமுத்து அறிவிப்பு. சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மக்களின் செல்வாக்குடன் இந்திய ஜனநாயகக் கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளது. அனைத்து மக்களுக்கும், அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதே கட்சியின் நோக்கம். பல்வேறு துறைகளில் மக்களுக்கு தேவையானதை […]
தூத்துக்குடியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிலையில், 21 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கீழ்கண்ட […]
அதிமுகவில் வழிகாட்டுதல் குழுவை விரிவுப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கினைப்பளார் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று காலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்லாமல் அக்கட்சியின் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலானது கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றதையடுத்து,தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மொத்த வாக்காளர்கள் 40,54,038 உள்ளனர். ஆண்கள் 19,92,198 பேர், பெண்கள் 20,60,767 […]