கேரளாவில் முந்திரி ஆலைத் தொழில் நலிவடைந்து வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. வேலை இழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையில் சிக்கித் தவிக்கின்றன. இந்நிலையில், முந்திரி தொழிலில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தொழிற்சங்க தலைவர்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்று கொல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த மூத்த தொழிற்சங்க தலைவர் இ.காசிம் (வயது 69), திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள பொது மருத்துவமனைக்கு கொண்டு […]