தொடர் மழைஎதிரொலி: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு..!
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர், மாண்டியா, சிக்மகளூர் உள்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இன்றும் மழை நீடித்தது. குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி, பாகமண்டலா மடிகேரி ஆகிய இடங்களில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள சிற்றாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளம் காவிரியில் வந்து சேர்வதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியின் குறுக்கே உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் […]