தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கபாடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை வழங்க அரசாணை வெளியாகியுள்ளது. தொடர் மழை காரணமாக தமிழகத்தில் அதிகம் பாதிப்புள்ளான மாவட்டம் என்றால் அது மயிலாடுதுறை மாவட்டம் தான். அதிலும், குறிப்பாக சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் மக்கள் தங்கள் இயல்பு மிகவும் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாக அறிவித்தது. அதன்படி, தற்போது அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது. […]