தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் தேங்கி கடல் போல காட்சியளிக்கிறது. இந்த நிலை தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். […]
தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று JEE தேர்வு 2 மாதங்களுக்கு தள்ளி வைத்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. ஒவ்வொரு வருடமும் தேசிய தேர்வு முகமை சார்பில் JEE முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதன்மை தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வந்த நிலையில், 2022-23 ஆம் கல்வியாண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்ட தேர்வு ஏப்ரல் 21 […]
முதலாமாண்டு பொறியியல் படிப்புப் பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் எனவும்,ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் தி.மு.க. அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: அண்ணா பல்.கழகம் முடிவு – மாணவ, மாணவியரிடையே அதிர்ச்சி: “2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக முதலாமாண்டு பொறியியல் கல்லூரி மாணவ,மாணவியருக்கான வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற நிலையில், அந்த மாணவர்களுக்கான முதல் […]
புதுச்சேரி:கொரோனா பரவல் எதிரொலியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு வரும் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருந்த நிலையில்,அவை ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க […]