உதய்பூரில் கன்னையா லால் என்பவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. […]
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 25 பேர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் லக்ஷர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி பயங்கரவாத சதித்திட்டம் நடத்துவதாக கடந்த மாதம் பத்தாம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த தீவிரவாதிகளுக்கு உதவியதன் அடிப்படையில் கஷ்மீரில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் இருபத்தி மூன்று பேரை […]