உத்தரபிரதேச அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) நீர் மாசுபாடு அடைந்ததை அடுத்து 120 கோடி அபராதம் விதித்துள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளால், கோரக்பூரின் ராம்கர் தால், அமி, ரப்தி, ரோகிணி ஆகிய ஆறுகளில் நீர் மாசுபாடு அடைந்து வருகிறது. தொழிற்சாலைகள் மாசு விதிகளை கடைபிடிக்காததற்காக அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு என்ஜிடி உத்தரவிட்டுள்ளது. மேலும் கோரக்பூரில் கழிவுநீர் வெளியேறியதற்கு உத்தரபிரதேச அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது. நீர் மாசுபாடு […]
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தற்காலிக தலைவராக நீதிபதி யு.டி சால்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2010ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இயற்கை வளங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விரைவில் விசாரணை செய்ய இந்த தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த ஸ்வதந்தர் குமார் நேற்றுடன் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றதையடுத்து நீதிபதி யு.டி சால்வியை தற்காலிக தலைவராக நியமித்து […]