பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க வி.கே.சசிகலா தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இல்லம்தோறும் மூவர்ண கொடி பரப்புரையின் கீழ் பொதுமக்கள் வீடுகளில் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க வி.கே.சசிகலா தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.
தமிழகத்தில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வரும் தேசியக்கொடி, தேசிய,மாநில சின்னங்கள்,முத்திரைகள்,ஸ்டிக்கர்களை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென பத்திரிகை,ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசு,அரசின் சின்னங்களை தவறாகப் பயன்படுத்துகின்றார்.எனவே,அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போட்டோ என்பவர் முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, தேசிய,மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக,காவல்துறை […]
சென்னை தலைமைச் செயலகத்தின் அருகே உள்ள போர் நினைவு சின்னத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள தேசிய கொடி. ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் […]
காபூல் விமான நிலைய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமெரிக்க தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். காபூல் விமான நிலையத்தில் மக்கள் பலரும் குவிந்து வரும் நிலையில் விமான நிலையம் அருகே தொடர்ச்சியாக இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த […]