தமிழகத்தில் நான் மூக்கையும் நுழைப்பேன், வாயையும் நுழைப்பேன். வாலையும் நுழைப்பேன். காலையும் வைப்பேன். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என தமிழிசை சவுந்தராஜன் பேசினார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுசேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்துவ வருகிறார். இதில், தெலுங்கானா ஆளுநராக அவர் பதவியேற்று இன்றோடு மூன்றாண்டுகள் ஆகிறது. அதனை குறிப்பிடும் வகையில், புத்தக கண்காட்சி நடைபெற்றது. அதில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் […]
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் மற்றும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகிய இருவரும் நீண்ட மாதங்களாக ஒருவரையொருவர் சந்தித்து கொள்வதில்லை எனவும் ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் தெலுங்கானா முதல்வர் கலந்துகொள்ளவதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவும் டெல்லியில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை நிரூபிப்போம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ட்வீட். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஜனவரி 24-ஆம் தேதி தேசிய பெண்குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த சர்வதேச பெண் குழந்தைகள் […]
தெலுங்கானாவில் ராஜபவனில் பதுக்கம்மா மலர் திருவிழாவின் 2-வது நாளான நேற்று, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பெண்களுடன் இணைந்து நடனம் ஆடி உள்ளார். தெலுங்கானாவில் பதுக்ம் மா என்ற திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழா என்பது பெண்கள் அனைவரும் கொண்டாடக்கூடிய மலர் திருவிழா ஆகும். இத்திருவிழா நவராத்திரி சமயத்தில் தெலுங்கானாவில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் கூடியதாகும். இந்த நாட்களில் தெலுங்கானா பெண்கள் வீட்டையும் தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து கடவுளை வழிபடுவது உண்டு. இந்த நிகழ்வின் […]