ரயில் பயணிகளுக்கான உதவி எண்கள், 044-25330714; 044-25330952 வழங்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள புறநகர் ரயில்பாதை, மேம்பாலங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளது, மேலும் சென்னை மண்டல பேரிடர் தடுப்பு மையம் 24 மணி நேரமும் இயங்கும் என்றும், வானிலை சூழ்நிலைக்கு ஏற்ப சென்னை புறநகர் ரயில்கள் ரத்து […]
மாண்டஸ் புயலின் தாக்கத்தை பொறுத்து பாதுகாப்பு தேவை இருப்பின் இரவு நேரத்தில் ரயில்கள் தாமதமாக புறப்படும். – தென்னக ரயில்வே. மாண்டஸ் புயல் இன்றிரவு கரையை கடக்கும் என்பதால் வடதமிழகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று 6 மாவட்டங்களில் இரவு நேர பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன் பிறகு புயலின் தாக்கம் உள்ள பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை நிறுத்தப்படும் எனவும் மற்ற பகுதிகளில் சேவை வழக்கம்போல இருக்கும் […]
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்கம். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது, கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து […]
தெற்கு ரயில்வே மண்டலத்திலிருந்து பீகார், கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிகளுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் அக்னிபாத் போராட்டங்களால் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் […]
மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு தெரிவித்து ட்வீட். மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள்ளது. இதுகுறித்து. சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தாமதமெனினும் வரவேற்கிறோம் ! மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் […]
மின்சாரரயில் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வேகமாக சென்ற ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரேக் சரியாக இயங்காததால், கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ரயிலில் யாரும் இல்லை எனவும், விபத்தில் ரயில் […]
தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள செல்பி மோகத்தால் ரயில் படிக்கட்டுகள்,ரயிலின் மேல் நின்று செல்பி எடுப்பது, ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுப்பது போன்ற விபரீதங்களால் இளைஞர்கள் பலி என்ற செய்தியை அவ்வப்போது நம் படித்து வருகிறோம். இந்நிலையில்,உயிருக்கு ஆபத்தான இச்செயல்களை கட்டுப்படுத்த ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.மேலும், கடந்த 2021-22 ஆம் ஆண்டில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இருந்து இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் […]
தேனி – ஆண்டிபட்டி இடையே மார்ச் 31- ஆம் தேதி மதியம் 1 முதல் 7 மணி வரை சோதனை ஓட்டம் நடக்கிறது. தேனி – ஆண்டிபட்டி இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் மார்ச் 31-ஆம் தேதி மதியம் 1 முதல் 7 மணி வரை நடக்கிறது. எனவே அந்த குறிப்பிடப்பட்ட நேரத்தில் வேக சோதனையின் போது பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் பாதையை நெருங்கவோ அல்லது கடக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் […]
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், அனைத்து ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்பட்டன. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ரயில் சேவை படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், 192 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நாகர்கோவில், முத்துநகர் , உழவன் விரைவு ரயில்களில் ஏப்ரல் 1-ம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும். […]
மதுரையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை புதிய ரயில் இயக்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான சுற்றறிக்கைக்கு தெற்கு ரயில்வே விளக்கம். மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக மேட்டுப்பாளையம் வரை புதிய விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் பெயரில் சுற்றறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்த நிலையில், மதுரையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ரயில் இயக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெற்கு […]
சென்னை:இன்று முதல் (ஜன.10 ஆம் தேதி) புறநகர் மின் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.மேலும்,கொரோனா கட்டுப்பாடுகளின்படி,புறநகர் ரயில் சேவைகள் 50% இருக்கை வசதியுடன் இயக்க அனுமதிக்கப்படும் என்றும் அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில்,நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் […]
சென்னை:ஜன.10 ஆம் தேதி முதல் புறநகர் மின் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை புறநகர் மின் ரயில்களில் பயணிப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி,புறநகர் மின் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும்,ரயில் நிலையத்தில் அல்லது பயணம் செய்யும்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. […]
ரயில் மேம்பாலம் பணிகள் நிறைவடைத்தை அடுத்து இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு. வேலூர் காட்பாடி அருகே திருவலம் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட்டதால் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. தூண்களில் ஏற்பட்ட விரிசல் சீரமைக்கப்பட்டதை அடுத்து, 3 நாட்களுக்கு பிறகு மேம்பாலத்தில் ரயில் ஓட தொடங்கியது. இன்ஜின், சரக்கு ரயிலை தொடர்ந்து முதல் பயணிகள் ரயிலாக சென்னை – திருவனந்தபுரம் ரயில் புறப்பட்டு சென்றது. விரிசல் ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட மேம்பாலம் […]
ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், முன்பதிவு கட்டணங்கள் திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஜோலார்பேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே, புறப்பட்டு சென்ற ரயில்கள் மற்றொரு வழித்தடத்தில் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. பொன்னையாற்றில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு காரணமாக ரயில்கள் சேவைகள் ரத்து என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு காரணமாக 3 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 8 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கன்னியாகுமரி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே ரயில்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் – கன்னியாகுமரி – நாகர்கோவில் ரயில் (06426) இன்று இரு […]
தனித்தனியாக அழைக்க கொடுக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளவும் என தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது. தலைநகர் சென்னையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் சென்னை முதல் திருவள்ளூருக்கு இடைப்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எந்தெந்த பகுதிகளுக்கு ரயில்கள் செல்லும், ரயில் போக்குவரத்திற்கான நேரம் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று அவசர உதவிக்கான ஹெல்ப்லைன் எண்கள் அறிவித்திருந்தது. […]
உத்தரப்பிரதேச கோரக்பூர் ரயில் ஓட்டுநர் தேர்வாளர்கள் பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டதற்காக,இந்திய ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட ஐம்பத்தி நான்கு விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து இந்திய ரயில்வே உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி சு.வெங்கடேசன் அவர்கள்,மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் […]