உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் விமரிசையுடன் தொடங்கியது. திருமலையில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக மாசி மாத பெளா்ணமிக்கு தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான விழா நேற்று முதல் ஸ்ரீவாரி திருக்குளத்தில் ஏழுமலையான் தெப்போற்சவம் விமரிசையுடன் தொடங்கியது. அதன் முதல் நாளான நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை சீதா, லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமசந்திரமூா்த்தி ஐந்து முறை தெப்பத்தை வலம் வந்தாா். சுவாமி வலம் வரும் அற்புத […]