Tag: தென் கொரியா

போர் அபாயம்: 200 பீரங்கி குண்டுகளை வீசிய வட கொரியா.! தீபகற்பம் பகுதியில் பதற்றம்….

தென் கொரியாவின் யோன்பியோங் தீவு அருகே இன்று காலை வட கொரியா 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசியுள்ளது. இதனையடுத்து, யோன்பியோங் தீவில் உள்ள பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு தென் கொரியா கேட்டுக் கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்துள்ளது. தென் கொரிய இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யோன்பியோங் கிராம அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தகவல்  தெரிவித்துள்ளார். வட கொரியா தாக்கிய குண்டுகளால் தென் கொரியாவில் எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும், […]

#South Korea 4 Min Read
North Korea

செய்தியாளர் சந்திப்பில் நடந்த சம்பவம்.. தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்திகுத்து!

தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், இன்று செய்தியளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,  தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே மியுங், தெற்கு துறைமுக நகரமான புசானின் கதியோக் தீவில் புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலைய பணிகளை மேற்பார்வையிட இன்று காலை அங்கு சென்றுள்ளார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த கூட்டத்தில் இருந்த […]

#South Korea 5 Min Read
Lee Jae myung

இறந்துபோன தங்கள் குழந்தையின் உடலை 3 வருடங்களாக மறைத்து வைத்த தம்பதி.!

தென் கொரியாவில் தனது இறந்து போன குழந்தையின் உடலை பெற்றோர் 3 வருடமாக மறைத்து வைத்துள்ளனர்.  தங்களது இறந்து போன குழந்தையை பாத்திரத்தில் வைத்து 3 வருடங்களாக மறைத்த தம்பதியின் செயல் தென் கொரியாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவில் கியோங்கி எனும் மாகாணத்தில் ஓர் தம்பதி தனது இறந்து போன குழந்தையின் உடலை ஓர் பிளாஸ்டிக் பாத்திரத்தில் மறைத்து வைத்துவிட்டனர். பொதுவாக, தென் கொரியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுகராதர பரிசோதனை, குழந்தைகளின் பள்ளிக்கூட சேர்க்கை பற்றிய […]

- 4 Min Read
Default Image

முன்னாள் குடியரசுத் தலைவர் சுன் டூ-ஹ்வான் காலமானார்!

தென் கொரியா முன்னாள் குடியரசுத் தலைவர் சுன் டூ-ஹ்வான் காலமானார். தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி சுன் டூ ஹ்வான்,இன்று சியோலில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று அவரது உதவியாளர்களை மேற்கோள் காட்டி யோன்ஹாப்(Yonhap) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவருக்கு வயது 90. தென் கொரியாவில் 1979 இல் இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றி 1988 வரை பதவி வகித்தவர் சுன் டூ ஹ்வான்.அதன்பின்னர், ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் தேசத்துரோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் […]

chun doo hwan 2 Min Read
Default Image

வடகொரியாவுக்குப் தென்கொரிய உயர்தலைவர்கள் பயணம்!

தென்கொரிய அதிபர் அலுவலகம் தென்கொரிய உயர் அதிகாரிகள் வடகொரியாவுக்குச் சென்று பேச்சு நடத்த உள்ளதாகத்  அறிவித்துள்ளது. தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் பகை நீடித்து வந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். போட்டியின் தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் வடகொரியத் தலைவர் கிம் ஜாங்கின் தங்கை, வடகொரிய நாடாளுமன்றத் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்தத் தலைவர்களுக்குத் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தனது மாளிகையில் விருந்தளித்துச் சிறப்பித்தார். இந்நிலையில் இந்த நட்புறவை […]

world 3 Min Read
Default Image