தூய்மைப் பணியாளர்கள் பணியினிடையே அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் இருக்கை ஏற்பாடு செய்யுமாறு தலைமைச் செயலாளர் உத்தரவு. ஒவ்வொரு அலுவலகத்திலும் தூய்மைப் பணியாளர்கள் பணியினிடையே அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் இருக்கை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். தலைமை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், அலுவலகங்களில் நாம் அமர்ந்து பணியாற்றும் அறைகளையும், உபயோகப்படுத்தும் ஓய்வறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தும்,தூய்மை பணியாளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதை பற்றி பலரும் என் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர். எனவே, […]