தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் 243 வழக்குகள் பதிவு செய்து 197 பேரை கைது செய்தனர். இதில் 173 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில் அமைதியான சூழல் திரும்பி உள்ளது. இதைத்தொடர்ந்து வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி […]