Thoothukudi Firing : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.? என உயர்நீதிமன்றம் கேள்வி. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது , கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் இந்த போராட்டம் மாபெரும் பெரும் போராட்டமாக மாறியது. இந்த போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. பி்ன்னர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கைத் தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து […]
கடந்த 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், பின் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இதன்பின் இந்த ஆணையம், தனது விசாரணை அறிக்கையை […]
தூத்துக்குடி ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் புகைப்படங்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி, தூத்துக்குடி ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு மற்றும் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் […]
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்குக் கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் நிதிக்கான காசோலையை வழங்கிய கனிமொழி எம்.பி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்குக் கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் நிதி வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கனிமொழி எம்.பி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களின் குடும்பத்தினரிடம் காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் திருமிகு. கீதா […]
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்குக் கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் நிதி வழங்கியமைக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கனிமொழி எம்.பி ட்வீட். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு, மேலும் கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் […]
சி.பி.ஐ(எம்) விமர்சனம் குறித்து சி.வி.சண்முகம் அறிக்கை அவதூறுச் சேற்றுக்குள் உண்மையை புதைக்கும் முயற்சியே என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள், நேற்று தூத்துக்குடி சம்பவம் குறித்து கோடிகளுக்கு விலை போன கம்யூனிஸ்டுகளுக்கு நாவடக்கம் தேவை என கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு கே.பாலகிருஷ்ணன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘சி.பி.ஐ(எம்) விமர்சனம் குறித்து சி.வி.சண்முகம் அறிக்கை அவதூறுச் சேற்றுக்குள் உண்மையை புதைக்கும் முயற்சியே என கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் […]
தூத்துக்குடி சம்பவம் குறித்து கோடிகளுக்கு விலை போன கம்யூனிஸ்டுகளுக்கு நாவடக்கம் தேவை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘வீதி வீதியாக உண்டியல் குலுக்கி சேர்க்கும் பணத்தில், டீ குடித்து கட்சிக்காக உழைத்த கம்யூனிஸ்ட் தொண்டர்களின் தியாகங்களை மண்ணில் போட்டு மிதிக்கும் வகையில் இன்றைக்கு தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து பல கோடிகளைப் பெற்று தங்கள் இயக்கத்தையே அறிவாலயத்தின் கொத்தடிமையாக மாற்றியுள்ளார்கள். தற்போதைய பொம்மை முதலமைச்சரின் குரலாக மார்க்சிஸ்ட் […]
பயிற்று மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆணையை பிறப்பித்துள்ளதா திமுக? என அண்ணாமலை கேள்வி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு யார் காரணம் என ஆணைய அறிக்கையில் தெளிவாக இல்லை அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை பாஜக ஏற்காது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தூண்டிவிட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் அதிக பொறியாளர்களை உருவாக்கும் தமிழகத்தில் தமிழில் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பணியிலிருந்த காவல் ஆய்வாளர் திருமலை பணியிடை நீக்கம். கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த […]
நேற்று எடப்பாடி பழனிசாமி கலவர நாடகத்தை நடத்தி,வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வுகள் நிமிட வாரியாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது. உளவுத்துறை தகவல் தெரிவித்தும் சட்ட ஒழுங்கு நிலை கவனிக்கப்படாமல் இருந்தது; தீவிரமாக கவனித்திருந்தால் ஆரம்பத்திலேயே சமாளித்திருக்கலாம் என அறிக்கை. எடப்பாடி பழனிசாமி அசட்டையாக இருந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது; நேற்று எடப்பாடி […]
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு கூடுதலாக தமிழக அரசு சார்பில் 5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தாமிர உருக்காலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் […]
தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரத்தில், அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று இறுதிநாள் கூட்டம் நடைபெறவுள்ளது. நேற்றைய கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்திக் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தவில்லை என அறிக்கையில் தகவல். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே இறந்த 5 பேர்களின் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை, முதல் துப்பாக்கிசூடு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர் தான் ஆட்சியர் வளாகத்திற்குள் முதல் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. காவலர் சுடலைக்கண்ணு […]
2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு தொடர்பான விசாரணையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு […]
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அறிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால்,தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர்.அந்த வகையில்,கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து,2018,மே 28 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில்,தூத்துக்குடியில் உள்ள தங்களது ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது. […]
தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13பேர் சுட்டுக்கொல்லப்பட்டதன் 4ம் ஆண்டு நினைவு தினத்தில், அவர்களுக்கு இதய அஞ்சலியைச் செலுத்துகிறேன் என டிடிவி தினகரன் ட்வீட். தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக,கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு […]
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாளை 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் கடந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாளை 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே மாதம் 25-ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே 22 ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், […]