குடும்ப தகராலால் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். தூத்துக்குடி, மேலஅலங்கார தட்டு பகுதியைச் சேர்ந்தவர் லோகராஜ். இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் பகவதி. இவர்களுக்கு திருமணமாகி 14 மாதங்கள்ஆன நிலையில் 3 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று ஏற்பட்ட தகராறில் சண்டை முற்றிய நிலையில் மிகவும் வேதனை அடைந்த லோகராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரணை […]
தூத்துக்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் வரும் 24 ந் தேதி ஆட்சியர் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது. மேலும் இந்த முகாம் சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன் தலைமையில் நடைபெறவுள்ளது. வட்டாச்சியர் அலுவலகத்தில் வரும் 24 ந் தேதி நடைபெறும் மனுநீதி கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவின் மூலம் சார் ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து பயனடையலாம். எனவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைக்க வேண்டும் மற்றும் வாக்காளர்களை ஒருங்கிணைக்க வேண்டுகோள் விடுத்தார் வருவாய் துறை ஆய்வாளர் வீரப்பன். மேலும் இது குறித்தும் அவர் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான பயிற்சி ஒன்றை கடந்த வெள்ளிகிழமை துவக்கி வைத்தார். மேலும் தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை உறுப்பினர்களாக சேர்த்து வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்த மையத்தின் மூலம் […]
திருமண அழைப்பிதழில் தாய்மாமன் பெயரை அச்சிட்டதால் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீரான்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வரமணி சாமுவேல். சமீபத்தில் இவருடைய மகன் ஜோசப்பு திருமணம் நடந்தது. அவரது மகனின் திருமண அழைப்பிதழில் தாய்மாமன் சாமுவேலின் பெயரை அச்சிடவில்லை. சாமுவேலின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் கேட்க வரமணி சாமுவேல் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே கடும் சண்டை நிகழ்ந்துள்ளது. இந்த சண்டை முற்றிய நிலையில் […]
தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்னும் சில நாள்களில் நடை பெறவுள்ளது. மேலும் சமீபத்தில் கோவில்பட்டிக்கு வருகை தந்தார் எம்.பி கனி மொழி. இந்நிலையில் 21 தொகுதிகளிலும் இடைதேர்தலால் ஆட்சி மாற்றம் நிகழும் கனிமொழி எம்.பி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் கோவில்பட்டியில் வக்கீல் தெருவில் உள்ள தனியார் திருமண மண்படத்தில் திமுக வடக்கு மாவட்ட நகர செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ மற்றும் பலர் வருகை தந்திருந்தனர். மேலும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தினை நாளை முதல்வர் ஆரம்பிக்கவுள்ளார் என்று விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் .செ.ராஜூ தெரிவித்துள்ளார். முதல்வர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதி வழியாக திருநெல்வேலிக்கு வருகை தருகிறார். எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி வழியாக திருநெல்வேலிக்கு வருகைதருகிறார். இதனால் அ .தி .மு.க சார்பில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் .செ.ராஜூ தெரிவித்துள்ளார்.
விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். நாளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திருநெல்வேலியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதி வழியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலிக்கு வருகைதரவுள்ளார். மேலும் இந்த விழாவில் முதலமைச்சர் சிறப்புரை ஆற்றவுள்ளார். முதலமைச்சர் வருகை குறித்து பாதுகாப்பு பணிகள், வரவேற்பு முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அமைச்சர் ஆய்வு மேற்கொள்ளும் போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
கோவில்பட்டியில் திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்த படஉள்ளதாக திருக்கோயில் பணியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த போராட்டம் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் ஜன.23-ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்த இருப்பதாக மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.ராமலிங்கம் கூறியுள்ளார். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லையப்பர் கோயில் எஸ்.வெங்கடேசன், முருகேசன், கோவில்பட்டி ந.பரமசிவன், சங்கரன்கோவில் சௌரிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனம் நடத்தி வரும் ஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலையில் சுற்றுசூழலுக்கு தீங்கு நடைபெறுகின்றது என்று தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தின் 100-வது நாள் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்து தமிழக அரசு ஆலைக்கு சீல் வைத்து இந்நிலையில் தமிழக அரசின் இந்த […]
தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா நிறுவனத்தில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிறுவனத்தால் அங்கே இருக்கும் மக்களின் சுற்றுசூழலை பாதிக்கும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டம் 100_வது நாளில் வன்முறையாக மாறி போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் தொடர்பாக விசாரணை நடத்தி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கோரி முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூன்று பேர் குழுவை நியமித்து […]
கோவில்பட்டி குருமலை வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான் தெருநாய்களிடம் இருந்து மீட்கப்பட்டது. கோவில் பட்டி குருமலை வனப்பகுதியில் அதிகமான புள்ளி மான்கள் வசித்து வந்தது. இந்நிலையில் 4 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று வழிதவறி மீனாட்சிபுரம் 5வது தெருவில் சுற்றி திரிந்தது. இதனை பார்த்த தெருநாய்கள் மானை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதனை ஆண்ட பொதுமக்கள் புள்ளிமானை தெருநாய்களிடம் இருந்து மீட்டு இரத்தம் வடிய வடிய வேப்பமரத்தில் கட்டி போட்டனர். பின் மானை காரில் ஏற்றி […]
கோவில்பட்டி அருகே, காயங்களுடன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த புள்ளிமானை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குருமலை வனப் பகுதியில், அதிகளவில் புள்ளி மான்கள் உள்ளன. இங்குள்ள மான்கள் அடிக்கடி காட்டுப்பகுதியை விட்டு வெளியே வந்து, வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில், கோவில்பட்டி சாலைப்புதூர் விலக்கில் உள்ள மீனாட்சிநகர் பகுதியில், புள்ளிமான் ஒன்று காயங்களுடன் தவித்து வந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மான்கள் உயிரிழப்பை […]
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வணிக நோக்கத்திற்க்காக தன்னீர் எடுக்க கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தண்ணீர் சட்டவிரோதமாக வணிக நிறுவனங்கள் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று திமுகவை சேர்ந்த ஜோயல் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமைத்தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.அதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்ரீவைகுண்டம் அணைகளில் இருந்து வணிக ரீதியாக , வணிக நோக்கத்திற்க்காக தண்ணீர் எடுக்க தடை அனுமதி இல்லை.மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் எடுத்துக் கொள்ளலாம் […]
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என்று தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசனை வெளியிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா […]
கஜா புயல் நிவாரணம் கேட்டு மாணவர்களுடன் ஆசிரியரும் சேர்ந்து பொதுமக்களிடம் வசூல் செய்ததை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். கஜா புயலினால் டெல்டா மாவட்டம் மிகுந்த பாதிப்படைந்துள்ளது.மின்சாரம் இல்லாமல் , உணவு இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் மிகுந்த கஷ்டப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் டெல்டா பகுதி மக்களுக்கு பல்வேறு பகுதியில் இருந்து நிவாரண உதவியானது சென்றுகொண்டு இருக்கிறது. திரைத்துறையை சார்ந்தவர்கள் , அண்டை மாவட்டம் , அண்டை மாநிலம் , அரசியல் கட்சிகள் , மாணவர்கள் , அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் டெல்டா […]
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமில்லை என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசனை வெளியிட்டது. இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள நிலத்தடிநீர் பாதிப்பு குறித்து மத்தியஅரசு நடத்திய ஆய்வில் தூத்துக்குடி நிலத்தடி […]
சென்னையில் உள்ள தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை பாதிப்புகள் குறித்து மனுக்கள் பெற்று , கருத்துக்கள் கேட்புக்கூட்டம் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன் இறுதி விசாரணை திங்களன்று நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாநகர செயலாளர் டி.ராஜா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வழக்கறிஞர்கள் ஷாஜிசெல்லன், சுப்புமுத்துராமலிங்கம், பாத்திமாபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விசாரணையின் இறுதியில் வரும் சனிக்கிழமை வரை 5 நாட்கள் […]
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 தூத்துக்குடி மீனவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை மற்றும் தலா 60 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக, 8 மீனவர்களை கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வாகன தணிக்கையின் போது, பைக் சாவியை எடுத்த போக்குவரத்து காவலரை கண்டித்து இளைஞர் மின்கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தினை சேர்ந்தவர் ஜோதி ரமேஷ். இவர் தன்னுடைய நண்பருடன் பைக்கில் நேற்று இரவு பஜார் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள், ரமேஷின் வண்டியை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். இதற்கு முறையாக ரமேஷ் பதில் சொல்லாததால், பைக் சாவியை எடுத்த போலீசார், […]
ஆத்தூரில் இன்று தாமிரபரணி புஷ்கர விழாவில் நீராடிய சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் உள்ள படித்துறைகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பாதுகாப்பு கருதி சில படித்துறைகளில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட இடங்களில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நீராட அனுமதி வழங்கப்படாத […]