தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது ..!!பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்….!!
தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை தூத்துக்குடியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 100 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு வெளியூர் செல்வோர் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் பேருந்து நிலையத்தில் போடப்பட்டுள்ளது. காமராஜர் மற்றும் வ.உ.சி. மார்க்கெட்டுகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. மதுரை, ஒட்டன்சத்திரம் சந்தைகளில் இருந்து காய்கறிகள் […]