தூத்துக்குடியில் அத்யவாசிய பொருட்கள் இன்றி தவிக்கும் மக்கள்..!!இணையம் தான் கட் என்றால் மாநகராட்சி தண்ணீரும் கட்..!!
போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டால் கடந்த 3 நாட்களாக போர்க்களம் போல காட்சியளிக்கும் தூத்துக்குடி நகரத்தில் பொதுமக்களும், செய்தி சேகரிக்க சென்றுள்ள பத்திரிகையாளர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். லத்தி மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்களால் தூத்துக்குடி நகர வீதிகளும், தெருக்களும் நிறைந்துள்ளன. 144 தடை உத்தரவு காரணமாக தூத்துக்குடி நகர மக்கள் வெளியில் இயல்பாக நடமாட முடியாத சூழல் உள்ளது. இதனால் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மக்களும், பத்திரிகையாளர்களும் சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். காவல்துறை நடத்திய துப்பாக்கி […]