South Chennai : தென்சென்னையில் தமிழிசை போட்டியிடுவதை கிண்டல் செய்த அமைச்சர் துரைமுருகன். தமிழகத்தில் தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுக்கிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். கடந்த 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் தான் வெற்றி பெற்று இருந்தார். கடந்த மக்களவை தேர்தலில் , தூத்துக்குடி தொகுதியில் […]
சென்னை திமுக வடக்கு மாவட்ட செயலாளராக ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக வீ.ஜெகதீசன் ஆகியோரை நியமித்து அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். READ MORE- ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு வெகுமதி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்! இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்” சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் த.இளையஅருணா அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக திரு.ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ.,(82/பி முதல் பிரதான சாலை, திருவள்ளூவர் நகர், கொடுங்கையூர், சென்னை-118) […]
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வேலூர், காட்பாடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அமைச்சர் துரைமுருகன் தனது கருத்துக்களை கூறியிருந்தார். அண்ணாமலையின் பகல் கனவு… தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் ! அரசு திட்டவட்டம்.! அவரிடம், முன்னாள் பிரதமர், மதசார்பற்ற ஜனதாதளம் (கர்நாடகா) தலைவர் தேவகவுடா பற்றி கேட்கப்பட்டபோது, தேவகவுடா பிரதமராக இருந்தபோதும் சரி, அதற்கு முன்னதும் சரி, தற்போதும் சரி தமிழகத்திற்கு ஒரு […]
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 3 திமுக கவுன்சிலர்களை மற்றும் திமுக கட்சி பிரதிநிதி ஒருவர் என மொத்தம் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணனுக்கு எதிராக அவ்வபோது ஒரு சில திமுக கவுன்சிலர்கள் போர்கொடி தூக்குவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற திருநெல்வேலி மாமன்ற கூட்டத்தில் கூட மேயர் மற்றும் துணை மேயர் வராத காரணத்தால் […]
ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை எனில், அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது பிறகு தெரியும். தமிழக ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே செய்கிறார். – அமைச்சர் துரைமுருகன். வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பொன்னையில நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகள் உடன் […]
உச்சநீதிமன்றம் வழங்கிய இடஒதுக்கீடு குறித்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என திமுக அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த உயர் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு, மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் தீர்ப்பு வழங்கினர். இதில் […]
காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்ததாக திமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக உட்கட்சி தேர்தல் மூலம் மல்லிகார்ஜுனா கார்கே தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் புதிய தலைவர் பற்றி சர்ச்சையான கருத்துக்களை திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு பின்னர் நீக்கிவிட்டார். திமுகவுடன் கூட்டணியில் […]
ஜெயலலிலதா மரணம் தொடர்பான அறிக்கை தாக்கல், தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அறிக்கை தாக்கல். அதன் மீதான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெறும் என பயந்து தான் இபிஎஸ் தரப்பினர் வெளிநடப்பு செய்கிறார்கள். என தமிழக அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார். தமிழக சட்டபேரவை நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாள் கூட்டத்தை புறக்கணித்த இபிஎஸ் இன்று அவரது ஆதர்வாளர்களோடு கலந்து கொண்டார். கலந்துகொண்டது முதலே, எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பாக தொடர் அமளி சட்டப்பேரவையில் நடந்தது. இதனை தொடர்ந்து, […]
மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை கொடுத்துள்ளோம். தாய்மார்களுக்கு 1000 ரூபாய் சில்லறை மாத்திக்கொண்டு இருக்கோம் விரைவில் கொடுத்துவிடுவோம். என கலகலப்பாக பேசியுள்ளார் அமைச்சர் துரைமுருகன். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்களின் கல்லூரி படிப்பிற்கு உதவியாக ,மாதம் 1000 ரூபாய் உதவி தொகை கொடுப்போம் என உறுதி அளித்தது. அதே போல, குடும்ப தலைவிக்கு 1000 மாதம் கொடுக்கப்படும் என அறிவித்தனர். இதில் முதற்கட்டமாக, மாணவிகளுக்கு […]
எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை என அமைச்சர் துரைமுருகன் விமர்சனம். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே நீர் தேக்கம் கட்டவுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கைக்கு பதில் அறிக்கையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடுதான் நடந்து கொண்டிருந்தார். அவருடைய […]
ஷட்டர் பழுதடைந்த பாலக்காடு, பரம்பிக்குளம் அணையை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘ அணையில் இருந்து நீர் வெளியேறுவதை பார்க்கையில் மனம் வேதனைப்படுகிறது.’ என குறிப்பிட்டார். கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்திருக்கும், பரம்பிக்குளம் அணை தான் கேரள மாநிலம் பாலகாடு, திருசூர் உட்பட தமிழகத்தில் கோவை சுற்றுவட்டார பகுதிக்கும் நீர் ஆதாரமாக திகழ்கிறது. அந்த பரம்பிக்குளம் அணையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் தண்ணீர் திறக்கும் மதகு (ஷட்டர் செயின்) பழுதடைந்த காரணத்தால், […]
அமைச்சர் துரைமுருகன் அவர்கள் திராவிட மாடல் புத்தகத்தை வெளியிட்டார். விருதுநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பள்ளி நாட்கள் தொடங்கி திமுகவில் இணைத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றிய கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருதும், திமுக பொருளாளர் டிஆர் பாலுக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் திராவிட மாடல் புத்தகத்தை வெளியிட்டார். இதனை டி.ஆர்.பாலு எம்.பி பெற்றுக்கொண்டார். இந்த புத்தகம் […]
மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில்,இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை நேற்று முன்மொழிந்தார்.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 1978 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது குறித்து பேசினார். பின்னர் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, போராடினார்கள். பின் எடப்பாடி பழனிச்சாமி போராடினர். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். என் மகன், பேரன், கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது பிரச்சனை போகுமென […]
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தனி தீர்மானம்: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 1978ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது குறித்து பேசினார். பின்னர் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, போராடினார்கள். பின் எடப்பாடி பழனிச்சாமி போராடினர். தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். என் […]
திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சூரியபிரகாஷ், தேனி நகர பொறுப்பாளர் டி.பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் எஸ்.பி.முரளி, போடி நகரச் செயலாளர் மா.வீ.செல்வராஜ், நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியம், தேவர் சோலை பேரூர் செயலாளர் பி.மாதேவ் […]
முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையடுத்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில்,திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர்கள் உடனடியாக ராஜினமா செய்ய வேண்டும் என முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில்,கூட்டணி கட்சிகளுக்கு பதவியை விட்டுக்கொடுக்காமல் இருந்த காரணத்தினால் திமுக நிர்வாகிகள் 7 பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சரும்,திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி,சின்னசேலம் பேரூராட்சி செயலர் செந்தில்குமார்,தருமபுரி மல்லாபுரம் பேரூராட்சி செயலர் உதயகுமார்,ஆனந்த்,ரகுமான் சான்,மோகன்குமார் […]
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் அய்யப்பன் நீக்கப்பட்டுள்ளார். மேலும்,கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி,திருமங்கலம் நகர பொறுப்பாளர் முருகன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதந்திரம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
கர்நாடக மாநிலத்தில் 2022 -23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேகதாது திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக அதன் 2022-23 பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்துள்ளன. மேகதாது அணை கட்டும் பிரச்சணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே இம்மாதிரி அறிவித்துள்ளது. இந்திய […]
கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் தங்களது பதவியை ‘ராஜினாமா’ செய்ய வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று முன் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி திமுக நகர செயலாளர் ரவிக்குமார் கட்சியில் இருந்து கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சிக்கு அவ பெயரை ஏற்படுத்திய ரவிக்குமார் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். […]
தமிழ்நாடு மக்களின் மீது தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மை மீது மாணவச் சமுதாயத்தின் மீது அக்கறை இருந்திருந்தால் இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் துடிதுடித்து அதிமுக பங்கேற்றிருக்க வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக தவிர்த்து மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் […]