ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், துப்பாக்கி சூட்டை கண்டித்தும், இந்தோனேசியா வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். தலைநகர் ஜகர்தாவில் தென்கிழக்காசிய தமிழ்ச்சங்கம் மற்றும் இந்தோனேசிய தமிழ்க் கலாச்சாரப் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கு வசிக்கும் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்றிணைந்து முழக்கங்களை எழுப்பினர். சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி, புற்றுநோயை உருவாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்
துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட நாட்டுபடகு மீனவர்கள் வேலைநிறுத்தம் 20,000 மேற்பட்ட நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட முழுவதும் 3 நாளாக இன்றும் 17,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை […]