தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து துபாயில் இருந்து இன்று சென்னை திரும்பினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். கட்சி பணிகளை விஜயகாந்த் மனைவி பிரேமலதா அவர்கள் தான் கவனித்து வருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து சிகிச்சைக்காக துபாய் சென்றார். அவருடன் இளைய மகன் சண்முக பாண்டியனும் சென்றிருந்தார். அவர் துபாயில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மருத்துவர்கள் […]