Dubai: துபாயில் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து செல்லும் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால் வளைகுடா நாடுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துபாயின் சில பகுதிகளில் ஓராண்டுக்கும் அதிகமான மழை ஒரே நாளில் பெய்துள்ளது. இதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் துபாயில் ஒருவர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. அதே போல அண்டை நாடான ஓமனில் 18 […]
இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில், இன்று துபாயில் நடைபெற்ற உலக அரசுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, உலகளாவிய நிர்வாக நிறுவனங்களில் சீர்திருத்தம் செய்ய அழைப்பு விடுத்தார். பிரதமர் பேசியதாவது, வளரும் நாடுகளின் கவலைகளையும், உலகளாவிய தெற்கின் பங்கேற்பையும் ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்பதே எனது […]
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். டெல்லியில் இன்று இரண்டாவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலை குறிப்பில் காணலாம்…
கத்தார் நாட்டில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக சுவாமி நாராயணன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஏழு கோபுரங்கள் கொண்ட இந்த கோவில் நிலநடுக்கம், அதீத வெப்பம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோவில் 400 மில்லியன் ஐக்கிய அரபு பணமதீப்பீடு செலவில் கட்டப்பட்டுள்ளது. துபாயில் புதிய சிபிஎஸ்இ அலுவலகம்… பிரதமர் மோடி அறிவிப்பு இதற்காகவும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்காகவும் […]
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறந்த கல்வியை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்தி, துபாயில் புதிய மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அலுவலகம் விரைவில் நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபியில் ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துரைத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பள்ளிகளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான இந்திய […]
கடந்த வருடம் மே மாத இறுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். தமிழகதிற்கு 1 டிரில்லியன் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து இந்த வருட தொடக்கத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் பல்வேறு தொழில் முதலீடுகளை கொண்டுவர பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டன. இதனை […]
ருமேனியாவை தளமாகக் கொண்ட லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஏர்பஸ் ஏ-340-வானது கடந்த வியாழன் அன்று ஐக்கிய அரபு நாட்டில் இருந்து அமெரிக்காவில் நிகரகுவா எனும் இடத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 303 பயணிகள் பயணித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அதில் 11 சிறார்களும் அடக்கம். .24 மணிநேரத்தில் 201 பேர் பலி.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிடம் வலியுறுத்தல்.! இந்த விமானமானது, இடையில் எரிபொருள் நிரப்பும் பொருட்டு பாரிஸில் இருந்து 150 கிமீ தொலையில் வத்ரி […]
மனிதர்கள் இல்லாமல் இயங்கும் உலகின் முதல் சூப்பர் மாடல் ரோபோட் காபி ஷாப், துபாயில் திறக்கப்படுகிறது. நாளுக்கு நாள் உலகில் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேளையில் மனிதர்களின் தேவையே இனி தேவைப்படாது என்பது போல் பல அற்புத நிகழ்வுகள் அங்கங்கு நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அந்தவகையில் உலகின் முதல் சூப்பர் மாடல் ரோபோட் காபி ஷாப், துபாயில் டோனா சைபர்-கஃபேவால் திறக்கப்பட இருக்கிறது. மனிதர்களே இல்லாமல் இயங்கும் இந்த காபி ஷாப், உலகிலேயே முதன் முறையாக திறக்கப்படும் […]
மனித கற்பனையின் வரம்புகளைத் தள்ளி, கனடிய கட்டிடக்கலை நிறுவனமான மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் இன்க். துபாயில் 5 பில்லியன் டாலர் மதிப்பில் நிலவின் வடிவிலான ரிசார்ட் ஒன்றை உருவாக்கி வருகிறது. மூன் துபாய், நிலவு வடிவ ரிசார்ட் 48 மாதங்களில் கட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக 735 அடி (224 மீட்டர்) உயரத்தைக் கொண்டிருக்கும். இது சந்திரனின் மேற்பரப்பில் இருப்பது போன்ற உணர்வைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன் துபாய்க்கு வருகை தரும் விருந்தினர்கள், ஸ்பா மற்றும் […]
உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும்,மண் அழிவை தடுக்க உலகின் கவனத்தை ஈர்க்கவும் (ஜூலை 5-ம் தேதி) சிறப்பு லேசர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 2 நிமிட லேசர் ஷோவில் மண் அழிவு குறித்தும் அதை உடனே சரி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் சத்குரு பேசியுள்ள செய்தி மற்றும் அவருடைய 100 நாள் மோட்டார் சைக்கிள் பயண காட்சிகள்,மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சர்வதேச […]
அபுதாபி:முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,அமீரக தொழில் மற்றும் நவீன தொழில்நுட்பத் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவை தற்போது சந்தித்துள்ளார். துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு அபுதாபி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,அமீரக தொழில் மற்றும் நவீன தொழில்நுட்பத் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.முதல்வருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டுள்ளார். தமிழகத்திற்கு புதிய முதலீடுகள் கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியது.பின்னர்,அபுதாபியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
தொழில் கண்காட்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார்.சுமார் 192 நாடுகள் பங்கேற்கும் பல்தொழில் கண்காட்சி துபாயில் நடைபெறுகிறது.இந்த நிலையில்,தொழில் கண்காட்சியில் பங்கேற்க இன்று மாலை தனி விமானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் துபாய் செல்கிறார். பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு: அங்கு சென்று தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.மேலும், கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் கைத்தறி, விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட […]
தொழில் கண்காட்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார்.துபாயில் நடைபெறும் தொழில் கண்காட்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்திக்கின்றார். முதலமைச்சருடன்,எம்எல்ஏ உதயநிதி உள்ளிட்டோரும் துபாய்க்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கார்ல்சன், 7.5-3.5 என்ற புள்ளி கணக்கில் இயானை வீழ்த்தி 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளார். துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு உலக சாம்பியனும்,உலகத் தரவரிசையில் நம்பர்-1 இடத்திலுள்ளவருமான நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன் மற்றும் உலகத் தரவரிசையில் 5 வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி ஆகியோர் மோதினர். இப்போட்டியின்,தொடக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட கார்ல்சன், 7.5-3.5 […]
ஐசிசி டி-20 உலகக் கோப்பை வெற்றியை ஆஸ்திரேலிய வீரர்கள் ஷூவில் பீர் ஊத்தி குடித்து கோலாகலாமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 […]
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR vs PBKS) ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14 வது சீசனின் 32 வது போட்டியானது கேஎல் ராகுலின் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையே துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2021-ல் சஞ்சு சாம்சனின் ராயல்ஸ் அணி தனது கடைசி போட்டியில் […]
உலகம் முழுவதும் தற்போது நிலவும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள ஊரடங்கால் ஐக்கிய அரபு எமிரேட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசு முடிவெடுத்தது. இந்நிலையில் இந்த பணியை வரும் 7-ம் தேதி மத்திய அரசு தொடங்குகிறது. இதன் முதல் கட்டமாக இரு ஏர் இந்தியா விமானங்கள் துபாய் சென்று அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர இருகின்றன. இந்த இரு விமானங்களும் கேரள மக்களுக்காக இயக்கப்படுகிறது என்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கான […]