துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவருமான எம் வெங்கையா நாயுடு பணி ஓய்வு பெற இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இன்று நடந்த ராஜ்யசபா கூட்டத்தொடரின் போது, அரசியல் தலைவர்கள் பிரியாவிடை உரைகளை ஆற்றியதால் அவர் உணர்ச்சிவசப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பல தலைவர்கள் ஓய்வு பெறும் துணை ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரியாவிடை உரைகளை நிகழ்த்தினர். திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி டெரெக் ஓ பிரையன், […]
சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் உள்ளூர் வீரர்களுடன் இன்று பேட்மிண்டன் விளையாடிய துணை ஜனாதிபதி. குடியரசு துணை தலைவர் வெங்காயா நாயுடு அவர்கள், தெலுங்கானாவில் இருந்து தனி விமானம் மூலம் ஒரு வார பயணமாக சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை, தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர். வெங்கையா நாயுடு அவர்கள், தனது மகளின் இல்ல […]
ஆந்திரப்பிரதேச மாநிலம், ஐதராபாத்தில் உள்ள எல்.வி.பிரசாத் கண் மருத்துவமனையில், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவிற்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. பிரவீன் கிருஷ்ணா வேதவள்ளி தலைமையிலான மருத்துவர் குழு அவருக்கு அறுவை சிகிச்சை செய்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் வெங்கய்யா நாயுடு, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அவரை, 3 நாட்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன