அதிமுக பொதுக்குழு நேற்று சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வதை முன்னிட்டு அந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததால்,டெல்லி செல்கிறேன் என தெரிவித்திருந்தார்.இதனிடையே,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் […]